இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்கணும்; இந்திய தூதரகம் எச்சரிக்கை

டெல்அவிவ்: இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையாகவும், விழிப்புடனும் இருக்க வேண்டும் என இந்திய தூதரகம் தெரிவித்து உள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவத்தினர், வான்வழித் தாக்குதலை முழு வீச்சில் தொடங்கியுள்ளனர். தலைநகர் டெஹ்ரான் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது. முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் இஸ்ரேல் அவசர நிலை பிரகடனம் செய்துள்ளது.

இந்நிலையில் இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

* இஸ்ரேலில் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அங்கு வசிக்கும் அனைத்து இந்தியர்களும் மிகுந்த எச்சரிக்கையுடனும், எல்லா நேரங்களிலும் விழிப்புடனும் இருக்க

வேண்டும்.

* இஸ்ரேல் பாதுகாப்பு துறை அதிகாரிகள் வழங்கும் வழிகாட்டுதல்கள், அறிவுறுத்தல்களை இந்தியர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

* https://www.oref.org.il/eng என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்.

* அனைத்து இந்தியர்களும் பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும்.

* அத்தியாவசியமற்ற மற்றும் தேவையற்ற பயணங்களை மறு அறிவிப்பு வரும் வரை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும்.

* உள்ளூர் செய்திகள், அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் அவசர எச்சரிக்கைகளை தொடர்ந்து மக்கள் கண்காணிக்க வேண்டும்.

* ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால் இந்தியர்கள் டெல் அவிவில் உள்ள இந்திய தூதரகத்தை அணுகலாம். +972-54-7520711 என்ற தொலைபேசி எண், co***********@*****ov.in மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

* தூதரகம் அதிகாரிகளை தொடர்பு கொண்டு, அவர்களின் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Source link