புதுடில்லி: அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையிலான மோதல் கவலை அளிக்கிறது என காங்கிரஸ் எம்பியும், லோக்சபா

புதுடில்லி: அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையிலான மோதல் கவலை அளிக்கிறது என காங்கிரஸ் எம்பியும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் தெரிவித்து உள்ளார்.

அவரது அறிக்கை: அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நடந்து வரும் மோதல் காரணமாக ஏற்பட்டுள்ள பதற்றம் மிகவும் கவலையளிக்கிறது. மத்திய கிழக்கு முழுவதும் உள்ள ஒவ்வொரு இந்தியர்களும் பாதுகாப்பாகவும், முன்னெச்சரிக்கை உடனும் இருக்க வேண்டும்.

நமது மக்களைப் பாதுகாக்க உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு இந்திய அரசை நான் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.

Source link