’டி20 உலக கோப்பை’ பயிற்சி ஆட்டம் – ஜெகதீசன் அபார சதம்…அமெரிக்காவை வீழ்த்திய இந்தியா

நவி மும்பை,

அமெரிக்காவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா ‘ஏ’ அணி வெற்றிபெற்றது.

இந்தியா, இலங்கையில், ஐ.சி.சி., ‘டி20 உலக கோப்பை’ (பிப். 7 – மார்ச் 8) 10வது சீசன் நடக்கவுள்ளது. மொத்தம் 20 அணிகள், நான்கு பிரிவுகளாக களமிறங்க உள்ளன. ‘நடப்பு சாம்பியன் இந்திய அணி, ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது.

இத்தொடருக்கு தயாராகும் வகையில் நேற்று பயிற்சி போட்டிகள் துவங்கின. நவி மும்பையில் நேற்று நடந்த போட்டியில் இந்திய ‘ஏ’ அணி, அமெரிக்காவை எதிர்த்து களமிறங்கியது. ‘டாஸ்’ வென்ற அமெரிக்கா பீல்டிங் தேர்வு செய்தது.

’டி20 உலக கோப்பை’ பயிற்சி ஆட்டம் - ஜெகதீசன் அபார சதம்...அமெரிக்காவை வீழ்த்திய இந்தியா
’நான் வியந்து பார்க்கும் வீரர்’ – விராட் கோலியை புகழ்ந்த நியூசிலாந்து வீரர்

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய ஏ அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 238 ரன்கள் குவித்தது. இதில் ஜெகதீசன் 55 பந்தில் 104 ரன் குவித்து அசத்தினார்.

கடின இலக்கைத் துரத்திய அமெரிக்க அணி, 19.4 ஓவர்களில் 200 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி வெற்றிப் பெற்றது. இந்தியா சார்பில் ரவி பிஷ்னோய் 3, கலீல் அகமது 2, நமன் திர் 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

Source link