இ ஸ்ரேல் – ஈரான் இடையிலான புவிசார் அரசியல் பதற்றங்கள், உலக பங்குச் சந்தைகளில் ஒருவித நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆனால், இது பீதி அடைவதற்கான நேரமல்ல; மாறாக, முதலீடு செய்வதற்கு ஏற்ற வாய்ப்பு என, நிதி மேலாண்மை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
‘பி.எம்.எஸ்., - ஏ.ஐ.எப்., வேர்ல்டு’ கருத்தரங்கில் நிபுணர்கள் தெரிவித்ததாவது:
வரும் திங்கட்கிழமை சந்தை துவக்கத்தில் சற்று பலவீனமாக இருக்கலாம்; ஆனால், அது அச்சப்படும் வகையில் இருக்காது
சந்தையில் நிலவும் இந்த தற்காலிக மாற்றத்தை கண்டு, பீதியடைந்து பங்குகளை விற்க வேண்டாம்
இந்திய பங்குச்சந்தை, குறிப்பாக ‘ஸ்மால் அண்டு மிட்கேப்’ பங்குகள், கடந்த 17 -18 மாதங்களாக நிலவி வந்த மந்த நிலையின் இறுதி கட்டத்தில் உள்ளன
பல நிறுவனங்கள் 30 – 40 சதவீத வளர்ச்சியை எட்டியிருந்தாலும், அவற்றின் பங்கு விலை 20 சதவீதம் வரை சரிந்துள்ளது. இது ஒரு வலுவான மீட்சிக்கு முன்னால் நடக்கும் மாற்றம்
குறிப்பாக, நிறுவனங்களின் லாப வளர்ச்சிக்கும், அவற்றின் பங்கு விலை உயர்வு க்கும் இடையிலான தொடர்பு 0.72ல் இருந்து 0.30ஆக குறைந்துள்ளது. அதாவது, லாபம் ஈட்டும் பல நிறுவனங்களின் பங் கு விலை இன்னும் உயரவில்லை. இது ஒரு பெரிய ஏற்றத்துக்கு முந்தைய அறிகுறியாகும்
கடந்த காலங்களில் இது போன்ற மதிப்பீட்டு சரிவுகள் ஏற்பட்ட போது, அடுத்த 12 மாதங்களில் 40 – 70 சதவீதம் வரை வருமானம் கிடைத்துள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
