இ ந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான இன்போசிஸ், பிப்ரவரி மாதத்தில் மட்டும் 20.34 சதவீத சரிவை சந்தித்துள்ளது. இது, 2013ம் ஆண்டுக்கு பின் அந்நிறுவனம் சந்திக்கும் மிக மோசமான மாதாந்திர வீழ்ச்சி.
ஏ.ஐ., தொழில்நுட்பத்தின் வருகையால், தகவல் தொழில்நுட்ப சேவை துறையில் ஏற்படப்போகும் மாற்றங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்த முதலீட்டாளர்களின் அச்சமே, இந்த அதிரடி விற்பனைக்கு காரணமாக கூறப்படுகிறது.
இதனால், இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு 1.33 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சரிந்துள்ளது.
டிசம்பர் காலாண்டு முடிவில், இன்போசிஸில் 22.12 சதவீத பங்குகளை இந்திய மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் வைத்திருந்தன. பங்கு விலை வீழ்ச்சியால், இந்நிறுவனங்களுக்கு மட்டும் கிட்டதட்ட 41,892 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
