நியூயார்க் : இரான் ஆட்சியாளர் கமேனி போரில் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் ராணுவ அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதை ஈரான் மறுத்துள்ளது.
ஈரான் ஆட்சியாளரும் மதகுருவுமான கமேனி வசிக்கும் மாளிகை மீது நேற்று அமெரிக்க ராணுவமும் இஸ்ரேல் ராணுவமும் குண்டு மழை பொழிந்தன. அவர் இருக்கும் இடத்தை துல்லியமாக அறிந்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் கமேனி உள்ளிட்டோர் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் ராணுவத்தினர் தற்போது அறிவித்துள்ளனர்.
எனினும் இதை ஈரான் அரசு மறுத்துள்ளது. கமேனி உயிருடன் இருப்பதாகவும் போரை வழிநடத்துவதாகவும் தெரிவித்துள்ளது.
