பாலக்காடு: கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், மாசி மாத உற்சவம் நேற்று

பாலக்காடு: கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், மாசி மாத உற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. தேவஸ்தானத்துக்கு சொந்தமான 36 யானைகளில், தேர்வு செய்யப்பட்ட மூன்று யானைகள் பங்கேற்ற யானையோட்டம் நடந்தது.

ரவி கிருஷ்ணன், பாலு, கிருஷ்ண நாராயணன் ஆகிய யானைகள் பங்கேற்றன. முதலில் ஓடி வந்த பாலு என்ற யானையை முந்தி, தெற்கு கோபுரம் வாசல் வழியாக கோவிலுக்குள் ஓடிவந்த ரவிகிருஷ்ணன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

நான்கு ஆண்டுகள் இடைவெளிக்கு பின் பங்கேற்ற ரவிகிருஷ்ணன், வெற்றி பெறுவது இரண்டாவது முறையாகும். இந்த யானை, ஏழு முறை வலம் வந்து மூலவரை வணங்கி நின்றது. பங்கேற்ற யானைகளுக்கு ‘யானையூட்டு’ (உணவு வழங்குதல்) நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

வரும் 10 நாட்கள் நடக்கும் விழாவில், ரவிகிருஷ்ணன் யானை மீது உற்சவர் பவனி வருவார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, காலையில் உற்சவ மூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

Source link