சரண் அடைந்து அதிகாரத்தை ஒப்படைக்க வேண்டும்: ஈரானிய பட்டத்து இளவரசர் அறிக்கை

வாஷிங்டன்: கமேனியுடன் இணைந்து ஆட்சி நடத்தியவர்களில் மீதமுள்ள அனைவரும் உடனடியாக சரண் அடைய வேண்டும். அதிகாரத்தை ஒப்படைக்க வேண்டும் என அமெரிக்காவில் வசிக்கும் ஈரானிய பட்டத்து இளவரசர் ரெசா பஹலவி கூறியுள்ளார்.

ஈரான் ஆட்சியாளரான மதகுரு கமேனி கொல்லப்பட்ட நிலையில், 50 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்த ஈரானின் பட்டத்து இளவரசர் ரெசா பஹல்வி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கடந்த சில வாரங்களுக்கு முன்பு பல்லாயிரக்கணக்கான ஈரானின் குடிமக்களை படுகொலை செய்ய உத்தரவிட்ட அரக்கன் கமேனி மறைந்துவிட்டார்.

அவரது அவமானகரமான மரணத்தாலும், அவரது நியமனங்கள் மற்றும் துணை நியமனங்களால், ஈரான், திணறி வருகிறது. இவை அனைத்தும் உங்கள் விருப்பம் மற்றும் துணிச்சலால் விரைவில் குப்பைத் தொட்டியில் வீசப்படும். ஈரான் என்ற மாபெரும் குடியரசு முழுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்த பேய் ஆட்சியை நாம் வீழ்த்துவோம்.இந்த பயங்கரவாத குடியரசில் எஞ்சியுள்ள அதிகாரிகளுக்கும் எனது செய்தி இதுதான்: உடனடியாக சரண் அடையுங்கள். எனது திட்டத்திற்கும் அதிகார மாற்ற கட்டமைப்புக்கும், உண்மையாக இருப்பதுடன், இனியும் ரத்தம் சிந்தாமல் இருக்க அதிகாரத்தை ஒப்படைக்க வேண்டும்.

கமேனிக்கு ஒரு வாரிசை நியமிக்க அதிகாரத்தில் எஞ்சி உள்ளவர்கள் முயன்றால், அது தோல்வியில் தான் முடியும். அவர்கள் யாரையும் பதவியில் அமர்த்தினாலும் அவர்களுக்கு சட்ட பாதுகாப்பு கிடையாது மட்டும் அல்லாமல், இந்த ஆட்சி செய்த குற்றங்களில் ஒரு பங்குதாரர் ஆகவும் இருப்பார்கள்.

ராணுவம் , சட்ட அமலாக்கம் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு நான் கூறுவது , உங்கள் ஆயுதங்கள் ஈரான் நாட்டை பாதுகாக்க தான பயன்பட வேண்டும். ஈரான் மக்களுடன் இணையுங்கள். ஈரானிய கூலிப்படையினர் இடமிருந்து ஈரான் மக்களை பாதுகாக்க உங்கள் ஆயுதங்களை பயன்படுத்த வேண்டும். இதனால் 47 ஆண்டுகால துயரம் விரைவில் நிறைவு பெறும். கமேனியின் மரணம், ஈரானில் சிந்தப்பட்ட ரத்தத்திற்கு ஈடு செய்யவில்லை என்றாலும், துக்கத்தில் இருக்கும் தந்தை, தாய்மார்கள், வாழ்க்கை துணைவர்கள் மற்றும் குழந்தைகள், சகோதரிகள் மற்றும் சகோதரிகளின் காயம் அடைந்த இதயங்களை அமைதிப்படுத்த முடியும். துணிச்சலான ஈரான் மக்களே, சர்வாதிகாரியின் மரணம் மாபெரும் தேசிய கொண்டாட்டத்தின் துவக்கத்தை குறிக்கிறது என்றாலும், அது முடிவு அல்ல. இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டும். தீர்க்கமான முடிவுக்கான நேரம் அருகில் உள்ளது.

உங்களது பாதுகாப்பை இறுதி செய்து கொள்வதுடன், ஈரான் ஆட்சியாளர்களுக்கு எதிராக ஆதரவை வெளிப்படுத்த வேண்டும். ஈரானின் எதிர்காலத்திற்கான உங்களது கோரிக்கையை உரக்க சொல்ல வேண்டும். உங்களின் பலம் மற்றும் ஆதரவின் மூலம் எனது பலம் கிடைக்கும். ஈரானில் உள்ள நமது நண்பர்களுக்காக சக்திவாய்ந்த குரலாக வெளிநாடுகளில் கடுமையாக உழைத்து வரும் ஈரானை சேர்ந்தவர்கள், தங்களது முயற்சியை தீவிரப்படுத்த வேண்டும். இன்னும் முக்கியமான நாட்கள் நமக்கு முன் உள்ளன. ஒன்றாக நாம் வெற்றிப்பாதையில் நடப்போம். ஈரான் ஆட்சியாளர்களை தூக்கி எறிவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Source link