தேசிய பங்கு சந்தை தனது புதிய பங்கு வெளியீட்டின் போது, அதன் பங்குகளை தனது சொந்த தளத்தில் பட்டியலிடாது என, என்.எஸ்.இ., நிர்வாக இயக்குநர் ஆஷிஷ் சவுகான் தெரிவித்துள்ளார்.
இந்திய விதிமுறைகளின்படி, ஒரு பங்குச்சந்தை தன்னைத்தானே ஒழுங்குபடுத்திக்கொள்ள முடியாது. எனவே, தங்களின் பங்குகளை மற்றொரு பங்கு சந்தையான மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிட திட்டமிட்டுள்ளதாக ஆஷிஷ் சவுகான் தெரிவித்தார். ஐ.பி.ஓ., வாயிலாக புதிய பங்குகளை வெளியிடப்போவதில்லை என்றும், நிறுவனம் தனது வளர்ச்சிக்கான செலவுகளை எதிர்கொள்ளும் அளவுக்கு லாபத்தில் இயங்கி வருவதாகவும் அவர் கூறினார். “ஐ.பி.ஓ., நிதி திரட்டல், தற்போதுள்ள பங்குதாரர்கள் தங்களின் பங்குகளை விற்பனை செய்வதற்கான ஒரு வாய்ப்பாகவே அமையும்.
தேசிய பங்குச்சந்தையில் தற்போது கிட்டத்தட்ட 1.95 லட்சம் பங்குதாரர்கள் உள்ளனர். இவர்கள் தங்களுக்கு விருப்பமான பங்குகளை விற்பனை செய்து பணமாக்கிக் கொள்ள இந்த வெளியீடு உதவும்,” என அவர் தெரிவித்தார்.
