T20 WC: வீரர்களுக்கு ரூ.50 லட்சம் அபராதம்; பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடி முடிவு?

ஐசிசி டி20 உலகக்கோப்பைத் தொடரில் சூப்பர் 8 சுற்றின் நேற்றையப் போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.

வீரர்களுக்கு அபராதம் விதித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

டி20 உலகக்கோப்பைத் தொடரில் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறத் தவறிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அபராதம் விதித்திருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

ஐசிசி டி20 உலகக்கோப்பைத் தொடரில் சூப்பர் 8 சுற்றின் நேற்று முந்தினம் நடைபெற்ற போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.

PAK vs SL match
PAK vs SL match

இதில் பாகிஸ்தான் அணி, இலங்கை அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தாலும் நெட் ரன் ரேட் அடிப்படையில் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

இதனால் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறாமல் தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறது.

இந்நிலையில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறத் தவறிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் 50 லட்ச ரூபாய் அபராதம் விதித்திருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

லீக் சுற்றில் இந்தியாவிடம் தோற்றபோதே வாரியம் அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

pakistan players
pakistan players

முக்கியத் தொடர்களில் தொடர்ந்து பாகிஸ்தான் அணி சொதப்பி வருவதால், வீரர்களுக்கு இந்தப் பெரிய தொகையை அபராதமாக விதித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Source link