ஈரான் மீது பெரிய தாக்குதலே இனிமேல் தான்; சொல்கிறார் டிரம்ப்

நியூயார்க்: ஈரானில் தற்போது நடப்பது வெறும் ஆரம்பம் தான். இனி தான் பெரிய தாக்குதலே காத்திருக்கிறது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி உள்ளார்.

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக தாக்குதல் நடத்தி வருகின்றன. இவ்விரு நாடுகளின் அதிரடி தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறி வைத்து ஈரான் ஏவுகணைகளை வீசி வருகிறது.

ஈரான் மீதான போர், மத்திய கிழக்கில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், அமெரிக்காவின் தாக்குதல்கள் மேலும் தீவிரமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய சூழலில், ஈரான் மீதான போர், தற்போதைய ராணுவ நடவடிக்கைகள் குறித்து டிரம்ப் கூறி உள்ளதாவது; நாங்கள் இன்னமும் அவர்களை(ஈரான்) வலுவாக தாக்க தொடங்கவில்லை. இப்பாது நடப்பது ஆரம்பம்தான். ஈரான் மீதான பெரிய அலை இன்னும் வரவேண்டி உள்ளது. எல்லாம் மிக சிறப்பாக நடந்து வருகிறது.

உலகில் மிக சிறப்பான ராணுவம் எங்களிடம் உள்ளது. அதை தான் நாம் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.

இவ்வாறு டிரம்ப் கூறினார்.

Source link