மேலும் 5 சுதர்சன் சக்ரா வான் கவசம்: ரஷ்யாவிடம் வாங்க இந்தியா திட்டம்

புதுடில்லி: ரஷ்யாவிடம் இருந்த மேலும் 5 வான் பாதுகாப்பு கவச வாகனங்களை(எஸ் 400) வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது.சுதர்சன் சக்ரா என பெயரிடப்பட்ட இந்த வான் பாதுகாப்பு கவச வாகனங்கள் , எதிரி நாட்டு ஏவுகணை, டிரோன்களை கண்டறிந்து அழிக்கும் வல்லமை கொண்டவை.

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா இந்த வான் பாதுகாப்பு கவச வாகனங்களை இந்தியா வாங்கி உள்ளது. எல்லைப் பகுதியில் 3 இடங்களில் இவை நிறுவப்பட்டுள்ளன. பழைய ஒப்பந்தப்படி இன்னும் இரண்டு எஸ்400 கவசங்களை ரஷ்யா வழங்க வேண்டி உள்ளது. இந்த கவசங்கள் ஆப்பரேஷன் சிந்தூரின் போது, பாகிஸ்தான் ஏவிய டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வெற்றிகரமாக தாக்கி அழித்தது. பாகிஸ்தானின் போர் விமானங்களும் வீழ்த்துவதற்கு பெரும் உறுதுணை வகித்தது.

இந்நிலையில், மேலும் 5 எஸ்400 வான் பாதுகாப்பு கவச வாகனங்களை வாங்க இந்தியா திட்டமிட்டு உள்ளது. இதற்கான ஒப்புதலை விரைவில் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வழங்கும் எனவும், இவை மேற்கு மற்றும் கிழக்கு முனைகளில் நிறுத்தப்படும்.இது தொடர்பாக ரஷ்யா உடன் ஆலோசனை துவங்கிவிட்டதாகவும், விரைவில் டெண்டர் விடப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சீனாவின் வான்பாதுகாப்பு அமைப்பு சர்வதேச அளவில் தோல்வி அடைந்துள்ளது. ஆப்பரேஷன்சிந்தூரின் போது பாகிஸ்தான் அதனை பயன்படுத்தியது. இதனை தாண்டி சென்று நமது விமானப்படை விமானங்கள் பாகிஸ்தான் விமான தளங்கள் மீது தாக்குதல் நடத்தின. வெனிசுலாவும் சீன அமைப்பை வாங்கியிருந்தது. ஆனால், அமெரிக்கப் படைகள் அந்நாட்டு அதிபரை கைது செய்து அழைத்துச் சென்று விட்டனர். ஈரானுக்கும் இந்த வான் பாதுகாப்பு அமைப்பை சீனா கொடுத்து இருந்தது. அங்கும் அது வேலை செய்யவில்லை. இந்த சூழ்நிலையில், இந்தியா கூடுதலாக எஸ் 400 வான் பாதுகாப்பு கவச வாகனங்களை வாங்க இந்தியா திட்டமிட்டு உள்ளது.

Source link