ரூ.22 லட்சம் கோடி முதலீடு செய்ய ஏ.ஐ., மாநாட்டில் நிறுவனங்கள் உறுதி

புதுடில்லி: டில்லியில் நடத்தப்பட்ட ‘இந்தியா ஏ.ஐ., இம்பாக்ட்’ மாநாட்டில், ரிலையன்ஸ், அதானி, கூகுள் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள், ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு துறையில் கிட்டத்தட்ட 22 லட்சம் கோடி ரூபாயை இந்தியாவில் முதலீடு செய்ய உறுதி அளித்துள்ளன.

Image 1543308

இது குறித்து மத்திய அரசு நேற்று வெளியிட்டு உள்ள அறிக்கை:

கடந்த பிப்., 16 முதல் 21 வரை நடைபெற்ற ‘இந்தியா ஏ.ஐ., இம்பாக்ட்’ மாநாடு, உலகிலேயே இதுவரை நடத்தப்பட்ட மிகப்பெரிய ஏ.ஐ., நிகழ்வாக அமைந்தது. இதில் 100க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள், 20 சர்வதேச அமைப்புகள் மற்றும் 6 லட்சம் பார்வையாளர்கள் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் உறுதி அளிக்கப்பட்டபடி, உள்கட்டமைப்பு, மென்பொருள் மற்றும் வன்பொருள் சார்ந்த ஏ.ஐ., துறைகளில் மட்டும் 22 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீடுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் இத்துறையில் அதிக முதலீடு செய்ய உறுதி அளித்துள்ளன.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Source link