ஈரானை வீழ்த்தியது தென் கொரியா

கோல்டு கோஸ்ட்: ஆஸ்திரேலியாவில், பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து 21வது சீசன் நடக்கிறது. கோல்டு கோஸ்ட் நகரில் நடந்த ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் தென் கொரியா, ஈரான் அணிகள் மோதின. இதில் தென் கொரிய அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

கென்ய வீராங்கனை முதலிடம்

டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சர்வதேச மாரத்தான் ஓட்டம் நடந்தது. பெண்கள் பிரிவில் இலக்கை 2 மணி நேரம், 14 நிமிடம், 29 வினாடியில் கடந்த கென்யாவின் பிரிஜிட் கோஸ்கெய் முதலிடம் பிடித்தார். அடுத்த இரு இடங்களை எத்தியோப்பியாவின் பெர்டுகான் (2:16:36), ஹாவி பெய்சா (2:17:39) கைப்பற்றினர்.

இத்தாலி வீரர் அசத்தல்

பாங்காக்: தாய்லாந்தில், கிராண்ட் பிரிக்ஸ் மோட்டார் சைக்கிள் பந்தயம் நடந்தது. இதில், பந்தய துாரத்தை 39 நிமிடம், 36.270 வினாடியில் கடந்து முதலிடம் பிடித்த ‘ஏப்ரிலியா ரேசிங்’ அணியின் இத்தாலி வீரர் மார்கோ பெஸ்செச்சி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். சிறந்த டிரைவருக்கான ஒட்டுமொத்த உலக சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் பெஸ்செச்சி (25 புள்ளி) 2வது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் ‘ரெட்புல் கே.டி.எம். பேக்டரி ரேசிங்’ அணியின் அகோஸ்டா (32) உள்ளார்.

எக்ஸ்டிராஸ்

* ஆஸ்திரேலியாவில் நடந்த நியூ சவுத் வேல்ஸ் ஓபன் கோல்ப் தொடரில் இந்திய வீராங்கனை திக் ஷா தாகர், 276 புள்ளிகளுடன் 20வது இடத்தை பகிர்ந்து கொண்டார்.

* இளம் மும்பை செஸ் வீரர் ஆரவ் டெங்லா 17, இந்தியாவின் 93வது ‘கிராண்ட்மாஸ்டர்’ அந்தஸ்து பெற்றார்.

Source link