-மும்பை: ரிசர்வ் வங்கி, சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவது தொடர்பான தனது விதிகளில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
அதில் கூறியுள்ளதாவது:
சிறு தொழில் நிறுவனங்கள் 20 லட்சம் ரூபாய் வரை கடன் கேட்கும்போது அவர்களிடம் வங்கிகள், பிணை எதையும் பெறக்கூடாது. கே.வி.ஐ.சி., அமைப்பு வழங்கும் பி.எம்.இ.ஜி.பி., எனும் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்திலும் பிணையில்லா கடன் வரம்பு, 20 லட்சமாக உயர்த்தப்படுகிறது.
சிறு, குறு நிறுவனங்கள் தங்களது கடன்களை ஒழுங்காக திருப்பி செலுத்தினால், அதை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு வங்கிகள் தங்கள் சொந்த விதிகளின்படி 25 லட்சம் ரூபாய் வரை பிணையின்றி கடன் வழங்கலாம். இதற்கு கடன் உத்தரவாத திட்டத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.
ஆனால், கடனுக்கு விண்ணப்பிப்போர், தாமாகவே முன்வந்து தங்கம் அல்லது வெள்ளியை பிணையாகக் கொடுத்தால் அ து விதிமீறல் ஆகாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட இவ்விதிகள், வரும் ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வருகின்றன.
