தாக்குதலால் மூடப்பட்டது எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்

ரியாத், ஈரானின் ட்ரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து, சவுதி அரேபியாவில் உள்ள ‘அராம்கோ’ நிறுவனத்துக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

அமெரிக்கா – இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் மற்றும் மேற்காசியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

சவுதி அரேபியாவின் ராஸ் தானுராவில் உள்ள அராம்கோ நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை ஈரானிய ட்ரோன்கள் நேற்று தாக்கியதில், பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இச்சம்பவத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேதம் குறித்து உடனடி தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும், மீட்பு பணிகள் மற்றும் தீயணைப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடந்தன.

இதையடுத்து, சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இத்தாக்குதல் குறித்து அராம்கோவின் ஊடக பிரிவு இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை.

உலகளாவிய எண்ணெய் சந்தை கடும் அழுத்தத்தில் இருக்கும் தருணத்தில், இத்தாக்குதல் நடந்துள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அராம்கோ, உலகின் மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமாகும்.

Source link