சென்னை: ”காங்கிரஸ் இல்லையென்றால், தி.மு.க.,வால் 25 தொகுதிகளை கூட வெல்ல முடியாது,” என, த.வெ.க., இணை பொதுச்செயலர் நிர்மல்குமார் விமர்சித்தார்.
அவர் அளித்த பேட்டி:
தி.மு.க.,வில் அடிப்படை மரியாதையை தான், காங்கிரஸ் எதிர்பார்க்கிறது. ஒப்பந்தமோ, கமிஷனோ கேட்கவில்லை.
கூட்டணி பிரச்னைக்கு தி.மு.க., தான் காரணம். காங்கிரஸ் இல்லையென்றால், தி.மு.க.,வால் 25 தொகுதிகளை கூட வெல்ல முடியாது. காங்., உடன் கூட்டணி பேச்சு குறித்து, விஜய் அறிவிப்பார்.
தி.மு.க., மீது எல்லா தரப்பு மக்களும் அதிருப்தியில் உள்ளனர். 5,000 ரூபாய் கொடுத்தபோதும், முதல்வருக்கு பயம் போகவில்லை. த.வெ.க., மீதான பயத்தால், தங்கள் கூட்டணியில் தே.மு.தி.க.,வையும், சாலையில் நடந்து செல்பவர்களையும் தி.மு.க., சேர்க்கிறது.
தி.மு.க.,வை தவிர எல்லாரும், எங்களுடன் கூட்டணி வைக்க ஆசைப்படுகின்றனர். தற்போது, எந்த கூட்டணியும் உறுதியாக இல்லை. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகுகூட, கூட்டணிகள் மாற வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
