ஈரான் போர் நீடித்தால் இந்தியாவிற்கு காத்திருக்கும் சிக்கல்கள் என்னென்ன?!

ஈரான் போர் நீடித்தால் இந்தியாவிற்கு என்னென்ன பாதிப்பு?

இந்தியா

ஐந்தாவது நாளாக ஈரானில் போர் தொடர்ந்து வருகிறது.

இந்தப் போர் மேலும் நீடித்தால் இந்தியாவிற்கு என்னென்ன பாதிப்புகள் இருக்கும் என்று Quick Points ஆக பார்ப்போம்… வாங்க…

> சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் கிட்டத்தட்ட 75 டாலர் அளவிற்கு வர்த்தகம் ஆகி வருகிறது. இப்போதைக்கு இந்தியாவிடம் கச்சா எண்ணெய் இருப்பு இருக்கிறது.

இந்தப் போர் நீடித்து இந்தியாவில் கச்சா எண்ணெய் குறைபாட்டை எட்டினால், இங்கே பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்கலாம்.

ஏற்றுமதி-இறக்குமதி
ஏற்றுமதி-இறக்குமதி

> எண்ணெயைத் தவிர்த்து, பிற ஏற்றுமதி, இறக்குமதிகளை இந்தியா ஹார்மோஸ் ஜலசந்தி வழியாகத் தான் செய்து வருகிறது. இப்போது அது மூடப்பட்டுள்ளது.

இதனால், இந்தியாவின் வணிகம் மற்றும் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இது நீடித்தால், வர்த்தகப் பற்றாக்குறை ஏற்படலாம்.

> ஈரானில் தான் போர் என்றாலும், வளைகுடா நாடுகளிலும் தாக்குதல் மற்றும் பதற்றம் பரவியுள்ளது. ஆகையால், அங்கே முழுவதுமாகவும், பாதியாகவும் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

இது இந்திய விமான போக்குவரத்தை பாதித்து வருகிறது.

> எண்ணெய் விலை உயர்வு, வணிக பாதிப்பு போன்றவை இந்தியாவில் பணவீக்கத்தை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நடந்தால் இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து பொருள்களின் விலையும் அதிகரிக்கும்.

இது சாமானியர்களையும் பாதிக்கும்.

> இந்தப் பதற்றத்தினால் இந்திய ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால், ஏற்கெனவே இந்திய முதலீட்டுகளை விற்றுக்கொண்டிருக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், மேலும் தங்களது முதலீடுகளை விற்கலாம்.

> முக்கியமாக, இந்திய பங்குச்சந்தை பெருமளவு வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. இந்தியாவின் ஏற்றுமதி, இறக்குமதி இந்தப் போரை சுற்றி இருப்பதால், இந்த வீழ்ச்சி தொடரலாம்.

சாபஹார்
சாபஹார்

> இந்தியாவின் நிதியுதவி உடன் ஈரானில் கட்டப்பட்டுள்ள துறைமுகம் “சாபஹார் துறைமுகம்’. இந்தத் துறைமுகம் மூலம் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் வழியைத் தவிர்த்து பிற நாடுகளுடன் வர்த்தகம் செய்யலாம் என்பது தான் இந்தியாவின் பிளான்.

ஈரானில் நடந்து வரும் இந்தத் தாக்குதலில் இந்தத் துறைமுகம் பாதிக்கப்பட்டால், நிச்சயம் அது இந்தியாவிற்கு இன்னொரு பெரிய அடியாக இருக்கும்.

> வளைகுடா நாடுகளில் கிட்டத்தட்ட ஒரு கோடி இந்தியர்கள் இருக்கிறார்கள். போர் தொடர்ந்தால் இவர்களின் நிலை கேள்விக்குறி ஆகும்.

> மேலும், இவர்களிடம் இருந்து இந்தியாவிற்கு வரும் பணத்திலும் சிக்கல் ஏற்படலாம்.

Source link