புதுச்சேரியில் நடைபெற்ற மாசிமக கடல் தீர்த்தவாரி நிகழ்ச்சி!
புதுச்சேரியில் நடைபெற்ற மாசி மக கடல் தீர்த்தவாரியில் புகழ்பெற்ற மணக்குள விநாயகர், மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கோவில்களின் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளின. இதில் புதுச்சேரி தமிழகம் என பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
