புனே: புனே சேலஞ்சர் டென்னிஸ் காலிறுதிக்கு இந்தியாவின் சாகேத் மைனேனி, திக்விஜய்பிரதாப் சிங் ஜோடி முன்னேறியது.
புனேயில், ஏ.டி.பி., சேலஞ்சர் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இரட்டையர் பிரிவு ‘ரவுண்டு-16’ போட்டியில் இந்தியாவின் சாகேத் மைனேனி, திக்விஜய்பிரதாப் சிங் ஜோடி, ஜப்பானின் மசாமிச்சி இமாமுரா, கோகோரோ இசோமுரா ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை 6-3 எனக் கைப்பற்றிய இந்திய ஜோடி, இரண்டாவது செட்டை 6-3 என வென்றார்.
ஒரு மணி நேரம், 6 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய மைனேனி, திக்விஜய்பிரதாப் ஜோடி 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது.
