கொழும்பு: இலங்கை கடற்பகுதியில் ஈரானுக்கு சொந்தமான ஐஆர்ஐஎஸ் டெனா கப்பல் மீது நீர்மூழ்கி கப்பல் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் 78 பேர் காயம் அடைந்துள்ளனர். 101 பேர் காணவில்லை.
இலங்கையின் காலி துறைமுகத்தில் இருந்து 40 கடல் மைல் தொலைவில் இந்த தாக்குதல் நடந்தது. உடனடியாக இலங்கை கடற்படையின் உதவி கோரப்பட்டது. அங்கு விரைந்த இலங்கை கடற்படை வீரர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். 30 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். இந்தத் தாக்குதல் சம்பவத்தை இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் தாக்குதல் நடத்தும் நிலையில், இலங்கை கடல்பகுதியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
