உங்களுக்கு, வாக்கியப்படி மார்ச்-6 அன்று நிகழவுள்ள சனிப் பெயர்ச்சியில் உங்கள் ராசியில் அமர்ந்து பலன் தரப் போகிறார் சனி பகவான். அதனால் நிகழப்போகும் மாற்றங்கள் என்ன… ஜோதிடரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன் கணித்த பலன்கள் உங்களுக்காக!

மீன ராசிக்கு அதிபதி குரு. ஆன்மிக விஷயத்தில் நாட்டம், இரக்கம், சட்டதிட்டத்தில் மதிப்பு, நாகரிகமான வாழ்வு, இப்படித்தான் வாழவேண்டும் என்பதில் பிடிப்பு, சமுதாய முன்னேற்றத்தில் அக்கறை ஆகிய அத்தனையும் இந்த ராசிக்காரர்களிடம் தென்படும். இந்தச் சனிப்பெயர்ச்சி மீன ராசிக்கு எப்படி?

மீன ராசிக்காரர்களுக்கான 11 பலன்கள்:
1. மீன ராசிக்கு, வாக்கிய பஞ்சாங்கப்படி 6.3.2026 முதல் 24.4.2028 வரை, ஜென்மச் சனியாக அமர்கிறார் சனிபகவான். எனினும் கவலை வேண்டாம். நல்லதையே செய்வார். அனுபவ அறிவால் சாதிப்பீர்கள். அவர் ஆட்சிபெற்று சுபத்தன்மை அடைவதால், பணவரவையும் அதிகரிப்பார்.
2. வாழ்வில் நிம்மதி பிறக்கும். கணவன் – மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைப் பாக்கியம் உண்டாகும். அதிக வட்டிக் கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். தடைப் பட்டிருந்த மகளின் கல்யாணம் விரைவில் நடக்கும். மகனுக்கு அயல்நாடு செல்ல விசா கிடைக்கும்.
3. வி.ஐ.பிகளின் நட்பால் சில காரியங்களைச் சாதிப்பீர்கள். புது வீடு, மனை வாங்குவீர்கள். எனினும், ஜென்மச் சனி என்பதால், உடல்நலனில் கூடுதல் கவனம் தேவை. மெடிக்ளைம் பாலிசி எடுத்துக் கொள்வது நல்லது. வழக்கறிஞரின் ஆலோசனையின்றி எந்த முடிவுகளும் எடுக்காதீர்கள்.
4. உங்களின் ராசிநாதனும், ஜீவன ஸ்தானாதிபதியுமான குருபகவா னின் பூரட்டாதி சாரத்தில் 6.3.2026 முதல் 2.4.2026 வரை செல்கிறார் சனி பகவான். அப்போது ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. உத்தியோகத்தில், வேலைச்சுமை இருக்கும்.

5. சனி பகவான் 2.4.2026 முதல் 14.4.2027 வரை உத்திரட்டாதியில் செல்வதால் பணவரவும், செலவுகளும் ஒருங்கே வந்து சேரும். திடீர்ப்பயணங்களும் அலைச்சலும் இருக்கும். அதேபோல் அவர் ரேவதியில் சஞ்சரிக்கும் காலத்தில் தாயாருடன் மனஸ்தாபம் எழலாம். எனினும், சமூகத்தில் நல்ல வளர்ச்சி உண்டு.
6. சனி வக்ரநிலையில் செல்லும்… 15.7.2026 முதல் 30.11.2026 வரை மற்றும் 28.7.2027 முதல் 13.12.2027 வரையிலான காலத்தில், பிரபலங்களின் உதவி கிடைக்கும். ஓரளவு பணப்புழக்கம் உண்டு. எனினும் முன் கோபத்தைத் தவிர்க்கவேண்டும். புது வாகனம் வாங்குவீர்கள். பிரபலங்களின் உதவி கிடைக்கும்.
7. இந்தப் பெயர்ச்சிக் காலத்தில் சனி பகவான் உங்கள் ராசிக்கு 3, 7 மற்றும் 10-ம் வீட்டைப் பார்க்கிறார். ஆகவே, வெளி வட்டாரத்தில் கௌரவப் பதவி கிடைக்கும். விலையுயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மனைவிக்கு கால்வலி, கழுத்து வலி வந்து நீங்கும். சனிபகவான் உத்தியோகத்தில் மரியாதை கூடும். சிலர், சுய தொழில் தொடங்க வாய்ப்பு உண்டாகும்.
8. இந்த ராசியைச் சேர்ந்த பெண்கள், சேமிப்பைப் பயன்படுத்தி ஆபரணங்கள் வாங்குவார்கள். பணிக்குச் செல்வோருக்கு மனப்பாரம் குறையும்; பதவி உயர்வு, சம்பள உயர்வு மகிழ்ச்சி தரும். உறவுகள் மத்தியில் அந்தஸ்து உயரும்.
9. வியாபாரத்தில் தடாலடியாக சில மாற்றங்கள் செய்வீர்கள். பெரிய முதலீடுகள் வேண்டாம். சந்தை நிலவரங்களை அறிந்து செயல்படுவது நல்லது. அதேநேரம் லாபம் கணிசமாக உயரும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களின் தொந்தரவு குறையும். ஹோட்டல், கணினி உதிரிபாகங்கள், இரும்பு, வாகனம், துணி வகைகளால் லாபம் அடைவீர்கள்.
10. உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு எல்லாம் கிடைக்கும். அதேநேரம் வேலைப்பளு கூடும். கணினித் துறையினர், கூடுதல் நேரம் வேலை பார்க்க வேண்டி வரும்.
11. உத்தியோகஸ்தர்களே, மேலதிகாரி உங்களைப் புரிந்துகொள்வார். எனினும் வீண் விமர்சனங்களைத் தவிர்க்கவும். இழந்த சலுகைகள் மீண்டும் கிடைக்கும். கணினித்துறையினருக்கு புது வாய்ப்புகள் தேடி வரும்.
