சாதாரண முதலீட்டாளர்களை ஈர்க்க ரிசர்வ் வங்கியுடன் இணையும் செபி

பாண்டு சந்தையை பற்றிய விழிப்புணர்வு, மிகக் குறைவாக உள்ளது. இதை ஒரு நீண்ட கால, நிலையான வருமானம் தரும் முதலீடாக மாற்ற, ரிசர்வ் வங்கியுடன் இணைந்து, புதிய திட்டங்களை செயல்படுத்த உள்ளதாக, செபியின் தலைவர் ‘துஹின் காந்தா பாண்டே’ தெரிவித்துள்ளார்.

சந்தை நிலவரம்

தற்போது இந்தியாவில் கார்ப்பரேட் பாண்டு சந்தை கிட்டத்தட்ட 58 லட்சம் கோடி ரூபாய் மதிப்பை கொண்டுள்ளது. இருப்பினும், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள 5,900 நிறுவனங்களில் வெறும் 700 நிறுவனங்கள் மட்டுமே, பாண்டு சந்தையை பயன்படுத்தி, நிதி திரட்டுகின்றன. இந்த எண்ணிக்கையை அதிகரிக்க செபி திட்டமிட்டுள்ளது.

முக்கிய திட்டங்கள்

* ரிசர்வ் வங்கியுடன் இணைந்து, ‘கிரெடிட் பாண்டு இண்டெக்ஸ்’ மற்றும் அது சார்ந்த டெரிவேட்டிவ்ஸ் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

* தற்போது நிறுவன முதலீட்டாளர்களே அதிகம் உள்ள நிலையில், சாதாரண சில்லரை முதலீட்டாளர்களையும் பாண்டு சந்தையில் ஈர்க்க நடவடிக்கை

* பாண்டு சந்தையில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், பாண்டு வாங்குதல் மற்றும் விற்பனையில் விலையை துல்லியமாக கண்டறியவும், ‘ஆர்.எப்.க்யூ.,’ என்று சொல்லப்படும் ‘ரெக்வஸ்ட் பார் கோட்’ எனும் புதிய கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

*அதே போல, முதன்மை சந்தையில் வெளிப்படையான முறையில் திட்டங்களை செயல்படுத்த, ஆர்.எப்.பி .,’ எனப்படும் ‘ரெக்வஸ்ட் பார் ப்ரோபோசல்’ எனும் வழிமுறை கொண்டு வரப்படஉள்ளது.

ம திப் பீ ட் டை பாருங்கள்

‘மத்திய அரசின் கடன் வாங்கும் திட்டங்களால், பாண்டு சந்தையில் வட்டி விகிதங்கள் உயர்ந்து காணப்படுகின்றன. ‘ஏ.ஏ.ஏ.,’ மற்றும் ‘ஏ.ஏ.,’ மதிப்பீடு கொண்ட பாண்டுகள், பொதுத்துறை வங்கிகளின் பிக்சட் டிபாசிட் வட்டியை விட கூடுதல் லாபம் தருகின்றன. வட்டி அதிகமாக இருக்கும் பாண்டுகளில் ரிஸ்க்கும் அதிகமாக இருக்கும். எனவே, ‘கிரிசில், இக்ரா’ போன்ற நிறுவனங்களின் தர மதிப்பீட்டை சரிபார்த்து முதலீடு செய்வது அவசியம். பாண்டு முதலீட்டுக்கு வழங்கப்படும் வட்டி விகிதங்கள் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப மாறுபடும்’.

இவ்வாறு அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Source link