ஈரான் மீதான தாக்குதல் சர்வதேச சட்டத்திற்கு முரணானது: கனடா

ஒட்டாவா: ஈரான் மீதான இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல்கள் சர்வதேச சட்டத்திற்கு முரணானது என கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளன. ஈரானும் பதில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.

இது குறித்து கனடா பிரதமர் மார்க் கார்னி கூறியதாவது: மேற்கு ஆசியாவில் நடந்த போர் சர்வதேச ஒழுங்கின் தோல்விக்கு மற்றொரு உதாரணம். ஈரான் மீதான இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல்கள் சர்வதேச சட்டத்திற்கு முரணானது.

மோதலை விரைவில் முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த இலக்கை அடைய உதவ கனடா தயாராக உள்ளது. அமெரிக்காவும் இஸ்ரேலும் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் நட்பு நாடுகளுடன் கலந்தாலோசிக்காமல் செயல்பட்டன. இவ்வாறு மார்க் கார்னி கூறினார்.

ஏற்கனவே ஈரானுக்கு ஆதரவாக சீனா குரல் கொடுத்துள்ளது. ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தும்படி அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை சீனா வலியுறுத்தியுள்ளது. தற்போது கனடா பிரதமரும் விரைவில் மோதலை முடிவுக்கு கொண்டு வர அழைப்பு விடுத்துள்ளார்.

Source link