பாடல்கள் படி ஆளுநர் ஆர். என் ரவி ஹோலி பண்டிகையைக் கொண்டாடி இருக்கிறார்.
இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
தலைவர்கள் பலரும் மக்களுக்கு ஹோலி வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆளுநர் ஆர். என் ரவி அவர்கள், சென்னை ஐஐடி மாணவ, மாணவிகளுடன் சேர்ந்து, பகுவா பாடி, ஹோலி பண்டிகையைக் கொண்டாடி இருக்கிறார்.

மேலும் தனது எக்ஸ் தளப்பக்கத்தில், ” எனது சகோதரிகள் மற்றும் சகோதரர்களுக்கு புனிதமான ஹோலி பண்டிகையை முன்னிட்டு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
ஹோலியின் துடிப்பான வண்ணங்கள் பாரதத்தின் நீடித்த உணர்வுகளான தீமையை நன்மை வென்றதையும் நல்லிணக்கத்தின் கொண்டாட்டத்தையும் நம்மை ஒரே குடும்பமாக இணைக்கும் ஆழமான ஒற்றுமையையும் பிரதிபலிக்கின்றன.
ஆளுநர் ரவி அவர்கள், சென்னை ஐஐடி மாணவ, மாணவிகளுடன் சேர்ந்து, பகுவா பாடி, ஹோலி பண்டிகையையும், ஒரே பாரதம் உன்னத பாரதம் உணர்வையும் கொண்டாடினார்.
Governor Ravi joined the students of IIT Madras in singing Phagua, celebrating Holi and the spirit of Ek Bharat Shreshtha Bharat.… pic.twitter.com/8Sgqd3kgyk— LOK BHAVAN, TAMIL NADU (@lokbhavan_tn) March 4, 2026
இந்த புனிதமான பண்டிகை நமது கூட்டு உணர்வை மீண்டும் தூண்டி, நமது நாகரிகத்தை வடிவமைத்த காலத்தால் அழியாத மதிப்புகளை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
இந்த ஹோலி வளம், மகிழ்ச்சி மற்றும் நல்ல ஆரோக்கியத்தை கொண்டுவரட்டும்.

2047 ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டியெழுப்ப அசைக்க முடியாத உறுதியுடன் நம்மை வழிநடத்தட்டும்” என்று ஹோலி வாழ்த்துகளையும் தெரிவித்திருக்கிறார்.
ஆளுநர் ஆர்.என் ரவி ஐஐடி மாணவர்களுடன் பகுவா பாடல் பாடி பண்டிகையை கொண்டாடிய வீடியோவை கவர்னர் மாளிகை வெளியிட்டிருக்கிறது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றன.
