ரூ.15,000 லஞ்சம் வாங்கிய உதவி ஆய்வாளர் சிக்கினார்

அருப்புக்கோட்டை: உணவுப்பொருள் உரிமம் வழங்க, 15,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய தொழிலாளர் உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை, சொக்கலிங்கபுரத்தை சேர்ந்தவர் சாந்தி, 48. தொழிலாளர் உதவி ஆய்வாளராக பணிபுரிந்தார். இவரிடம், பந்தல்குடியை சேர்ந்த சங்கரநாராயணன், 50, என்பவர், உணவுப்பொருள் உரிமம் பெற விண்ணப்பம் செய்திருந்தார்.அதற்கு அனுமதி தர, சாந்தி, 15,000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அவர், விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.அவர்களின் ஆலோசனை படி, மதியம் 1:30 மணிக்கு அலுவலகத்தில் வைத்து, சாந்தியிடம் அவர், 15,000 ரூபாய் கொடுத்தபோது, மறைந்திருந்த போலீசார், அந்த பெண் அதிகாரியை கைது செய்தனர்.

Source link