மஹாராஷ்டிராவில், ஏழு ராஜ்யசபா இடங்களில், மஹா விகாஸ் அகாடி கூட்டணிக்கு ஒரேயொரு சீட் மட்டுமே கிடைக்கும். இதை பெற கூட்டணி கட்சி களிடம் சில நாட்களாக காங்., தொடர்ந்து பேச்சு நடத்தி வந்தது. ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் பதவியை தக்கவைக்க இந்த சீட் அவசியம் என்றும் அக்கட்சி வலியுறுத்தியது. சரத் பவாரின் ராஜ்யசபா எம்.பி., பதவிக்காலம் முடிவடைவதால், அவரை மீண்டும் எம்.பி.,யாக்க அவரது கட்சி விரும்பியது.
இதை உத்தவ் தாக்கரே, சோனியா, ராகுல், கார்கே ஆகியோரிடம் சரத் பவாரின் ஆதரவாளர்கள் எடுத்துரைத்தனர். இதை ஏற்ற அவர்கள், சரத் பவாரை மீண்டும் எம்.பி.,யாக்க சம்மதம் தெரிவித்தனர். விரைவில் சரத் பவார் வேட்புமனு தாக்கல் செய்வார் என கூறப்படுகிறது.
