சென்னை: கர்நாடகா மாநில அ.தி.மு.க., செயலராக இருந்த புகழேந்தி, புரட்சி அ.தி.மு.க., என்ற புதிய கட்சியை துவக்கி உள்ளார்.
கர்நாடகா மாநில அ.தி.மு.க., செயலராக இருந்த புகழேந்தி, சசிகலாவின் ஆதரவாளராக இருந்தார். பின்னர் தினகரன், பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல் பட்டார்.
பன்னீர்செல்வம் தி.மு.க.,வுடன் இணைந்த நிலையில், புரட்சி அ.தி.மு.க., என்ற புதிய கட்சியை புகழேந்தி துவக்கி உள்ளார்.
பன்னீர்செல்வத்துடன் இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன், அண்ணா எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க., என்ற கட்சியை துவக்கி உள்ளார். சசிகலா புதிய கட்சியை துவக்கப் போவதாக அறிவித்து, கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தி உள்ளார்.
இந்நிலையில் புகழேந்தியும் தனி கட்சி துவக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
