இந்தியா: சீனா, பாகிஸ்தானை விட குறைவு; ஜப்பானை விட அதிகம்! – பிற நாடுகளுக்கு ட்ரம்பின் வரி எவ்வளவு?

அமெரிக்கா: இந்தியாவிற்கு 18 சதவிகித வரி; பிற நாடுகளுக்கு எத்தனை சதவிகித வரி?

மோடி - ட்ரம்ப்

இந்திய பிரதமர் மோடி – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இடையே நேற்று இரவு நடந்த போன்கால்… அமெரிக்கா இந்தியா மீதான வரியை 18 சதவிகிதமாக குறைத்தது… – இது தான் இன்றைய ஹாட் டாபிக்.

கடந்த ஆகஸ்ட் மாதம், 25 சதவிகித வரி மற்றும் ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதால் கூடுதல் 25 சதவிகித வரி என இந்தியா மீது மொத்தம் 50 சதவிகித வரியை விதித்திருந்தது அமெரிக்கா.

இந்த வரி இந்தியாவின் ஜவுளித்துறை, தோல் மற்றும் காலணித் துறை, ரத்தின கற்கள் துறை, கடல்சார் உணவுத் துறைகளை மிகவும் பாதித்தது.

ஆசியாவிலேயே இந்தியாவிற்கு தான் அதிக அளவு வரி இருந்தது. ஆனால், நேற்றைய இரவு அனைத்தையும் மாற்றிவிட்டது.

ட்ரம்ப் - பரஸ்பர வரி
ட்ரம்ப் – பரஸ்பர வரி

இப்போது இந்தியாவைத் தவிர்த்து பிற முக்கிய நாடுகளுக்கு அமெரிக்கா எத்தனை சதவிகித வரி விதித்துள்ளது என்பதைப் பார்ப்போம்.

சீனா – 37 சதவிகிதம்,

பிரேசில் – 50 சதவிகிதம்,

வியட்நாம், வங்கதேசம் – 20 சதவிகிதம்,

பாகிஸ்தான், மலேசியா, கம்போடியா, தாய்லாந்து – 19 சதவிகிதம்,

ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், சுவிட்சர்லாந்து – 15 சதவிகிதம்,

இங்கிலாந்து – 10 சதவிகிதம்,

மியான்மர் – 40 சதவிகிதம்,

தென் ஆப்பிரிக்கா – 30 சதவிகிதம்,

தென் கொரியா – 25 சதவிகிதம்,

மெக்சிகோ – 30 சதவிகிதம்,

கனடா – 35 சதவிகிதம்.

ஆசியாவிலேயே ஜப்பானுக்கு அடுத்து மிக குறைந்த சதவிகித வரி உள்ள நாடு இந்தியா தான். அதே மாதிரி, ட்ரம்ப் பிரிக்ஸ் அமைப்பை கடுமையாக சாடி வருகிறார்.

அந்த அமைப்பில் இருக்கும் நாடுகளை வைத்து பார்க்கும்போதும், இந்தியாவிற்கு தான் குறைந்த வரி.

Source link