நியூயார்க்: ஐஎஸ்ஐஎஸ் மற்றும் அல் கொய்தா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக சர்வதேச அமைப்புகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று ஐநா கூட்டத்தில் இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
ஐநா பயங்கரவாத எதிர்ப்பு குழுவின் உறுப்பு நாடுகளின் ஆண்டு பொதுக்கூட்டத்தில் ஐநாவுக்கான இந்திய நிரந்தர தூதரகத்தின் முதல் செயலாளர் ரகு பூரி கலந்து கொண்டார். அதில், அவர் பேசியதாவது; பயங்கரவாதம் என்பது சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். அதற்கு எல்லைகளோ, தேசியமோ அல்லது இனமோ கிடையாது. இது சர்வதேச அமைப்புகள் கூட்டாக எதிர்கொள்ள வேண்டிய ஒரு சவாலாகும், எனக் கூறினார்.
தொடர்ந்து, கடந்த ஆண்டு நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாத சம்பவத்தை சுட்டிக் காட்டிய அவர், ஐநா பட்டியலிட்டுள்ள பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் துணை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக குறிப்பிட்டார்.
