அமெரிக்க எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்; நடுக்கடலில் தீ பற்றியது!

டெஹ்ரான்:

வளைகுடாவில் அமெரிக்க எண்ணெய் கப்பலை ஏவுகணையால் தாக்கியதாக ஈரான் தெரிவித்துள்ளது.

வளைகுடாவில் அமெரிக்க எண்ணெய் கப்பல் மீது ஈரான் ஏவுகணையால் தாக்குதல் நடத்தியது. நடுக்கடலில் அமெரிக்க எண்ணெய் கப்பல் தீப்பிடித்து எரிகிறது. இந்த தாக்குதலின் போது கப்பலில் இருந்தவர்கள் நிலை என்ன என்பது குறித்து இதுவரை எந்த விபரமும் வெளியாகவில்லை.

இந்திய பெருங்கடலில் சென்று கொண்டிருந்த ஈரான் கடற்படை போர்க்கப்பல், ‘டீனா’ தாக்கப்பட்டதற்கு பதிலடியாக எண்ணெய் கப்பலை ஈரான் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் போர்க்கப்பல் மீதான அமெரிக்காவின் டர்பிடோ ஏவுகணை தாக்குதலில் 87 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த கொடூர செயலுக்கு அமெரிக்கா நிச்சயம் வருத்தப்பட வேண்டி இருக்கும் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி எச்சரித்து இருந்த நிலையில், அமெரிக்க கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Source link