உங்கள் Gmail பாதுகாப்பாக இருக்கிறதா? – ஹேக்கர்களிடமிருந்து தப்பிக்க 2 எளிய வழிகள்!

இணையத்தைப் பயன்படுத்தும் ஒவ்வொருவருக்கும் Gmail என்பது வெறும் மின்னஞ்சல் சேவை மட்டுமல்ல; அது நமது டிஜிட்டல் அடையாளத்தின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. அப்படிப்பட்ட Gmail கணக்கின் பாதுகாப்பை உறுதி செய்வதில் Recovery Phone Number மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. உங்கள் பாஸ்வேர்டு மறந்துவிட்டாலோ அல்லது யாராவது உங்கள் கணக்கை அனுமதியின்றி அணுக முயன்றாலோ, இந்த எண் மூலமே கணக்கை மீண்டும் மீட்டெடுக்க முடியும்.

தகவல் திருட்டு
தகவல் திருட்டு

வழிமுறைகள்

  • முதலில் myaccount.google.com சென்று, உங்கள் Gmail முகவரியில் லாக்-இன் செய்யவும்.

  • மெனுவில் Security and sign-in ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.

  • அங்கு Recovery phone ஆப்ஷன் இருக்கும்.

  • பாதுகாப்பு காரணங்களுக்காக, கூகுள் மீண்டும் உங்கள் பாஸ்வேர்டு கேட்கும்.

  • பிறகு, Add recovery phone என்பதில் நீங்கள் பயன்பாட்டில் வைத்திருக்கும் மொபைல் எண்ணை உள்ளிடவும்.

  • அடுத்து Get code என்பதைக் க்ளிக் செய்தால் உங்கள் மொபைல் எண்ணிற்கு 6 இலக்க OTP வரும். அதை உள்ளிட்டு Verify செய்யவும்.

ஏன் Recovery phone எண் அவசியம்?

பாஸ்வேர்டு மறந்தாலோ, உங்கள் அனுமதி இல்லாமல் வேறு யாராவது லாக்-இன் செய்ய முயற்சி செய்தாலோ, கூகுள் உடனடியாகத் தகவல் தெரிவிக்கும். சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகளால் கணக்கு முடக்கப்பட்டால், அதை எளிதாக மீட்டெடுக்கலாம். இது உங்கள் கணக்கிற்கு ஒரு கூடுதல் பாதுகாப்பு அடுக்காகச் செயல்படுகிறது.

Cyber Security
Cyber Security

கூடுதலாக, அதே செட்டிங்ஸில் இருக்கும் 2-Step Verification வசதியையும் ஆன் செய்து கொள்ளலாம். இதுவும் உங்கள் Gmailக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது. யாராவது உங்கள் கடவுச்சொல்லைத் தெரிந்து வைத்திருந்தாலும், உங்கள் மொபைல் போன் இல்லாமல் அவர்களால் உங்கள் கணக்கிற்குள் நுழைய முடியாது.

ஹேக்கர்கள் மற்றும் இணையத் திருடர்கள் நமது தனிப்பட்ட தகவல்களைத் திருட எப்போதும் காத்திருக்கிறார்கள். உங்கள் கணக்கு முடக்கப்பட்ட பிறகு வருந்துவதை விட, இப்போதே சில நிமிடங்கள் ஒதுக்கி இந்த பாதுகாப்புமுறைகளைச் செய்து தகவல்களைப் பாதுகாப்பாக வைத்திருங்கள்.

Source link