சென்னை: ஜனநாயகத்தைக் காத்திடும் குரலாய் ராஜ்யசபாவில் தொடர்ந்து ஒலிப்போம் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:ஜனநாயகத்தைக் காத்திடும் குரலாய் ராஜ்யசபாவில் தொடர்ந்து ஒலிப்போம்.
மக்களின் நம்பிக்கையைப் பெற்று, தமிழகத்தில் புதிய வரலாறு படைத்துக் கொண்டிருக்கும் நமது கூட்டணி சார்பில், திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவா மற்றும் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவைச் சேர்ந்த எல்.கே. சுதீஷ் ஆகியோர் கூட்டணிக் கட்சியினருடன் ராஜ்யசபா தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
நமது அரசியல்சட்ட விழுமியங்களையும் இந்திய நாட்டின் ஒற்றுமை – பன்மைத்துவம் ஆகிவற்றையும் பேணிக்காத்திடத் தொடர்ந்து பணியாற்றுவோம்! இவ்வாறு அந்த அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளார்.
