புதுடில்லி: ஈரான் மதத்தலைவரும், ஆட்சியாளருமான கமேனி மரணத்துக்கு இந்தியா இரங்கல் தெரிவித்துள்ளது. டில்லியில் உள்ள அந்நாட்டின் தூதரகத்தில் வைக்கப்பட்டுள்ள இரங்கல் பதிவேட்டில் மத்திய வெளியுறவு செயலர் கையெழுத்து போட்டுள்ளார்.
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் கடுமையான தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் ஈரான் ஆட்சியாளராக இருந்த கமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் கடந்த பிப்.,28 ல் கொல்லப்பட்டனர். இதற்கு நிச்சயம் பழிவாங்குவோம் என ஈரான் கூறியுள்ளது.
கமேனி மறைவு குறித்து இந்தியா எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருந்த நிலையில், இன்று டில்லியில் உள்ள ஈரான் தூதரக அலுவலகத்துக்கு மத்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி சென்றார். கமேனி மரணத்துக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ள பதிவேட்டில் இந்திய அரசு சார்பில் அவர் கையெழுத்திட்டார்.
