குப்பையில் கிடந்த 15 சவரன் நகை: போலீசிடம் ஒப்படைத்த தூய்மைப்பணியாளரின் நேர்மைக்கு குவியுது பாராட்டு

காரைக்குடி: குப்பையில் கிடந்த 15 சவரன் நகையை போலீசில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர். உரிமையாளர் 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கி கவுரவித்தார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி காட்டுத் தலைவாசல் பகுதியை சேர்ந்தவர் டார்ஜிலின். டிராவல்ஸ்நடத்தி வருகிறார். வீட்டில் இருந்த 15 சவரன் நகையை எடுத்த குழந்தை தெரியாமல் குப்பை தொட்டியில் போட்டது. அதனை துப்புரவு பணியாளர் சேகரித்து சென்றார்.

குப்பையை செல்வி என்ற தூய்மைப் பணியாளர் தரம் பிரிக்கும்போது நகைகள் இருந்தது தெரியவந்தது. அது யாருடையது என்பது தெரியாத காரணத்தினால், அதனை காரைக்குடி வடக்கு போலீஸ் ஸ்டேசனில் ஒப்படைத்தார். விசாரணையில் அந்த வகை டார்ஜிலினுக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.

இதனையடுத்து நகையை காரைக்குடி ஏஎஸ்பி ஆஷிஷ் புனியா முன்னிலையில் போலீசார் அவரிடம் ஒப்படைத்தனர். நகையை போலீசிடம் ஒப்படைத்த செல்விக்கு போலீசாரும், உரிமையாளரும் பாராட்டு தெரிவித்தனர். மேலும் டார்ஜிலின், செல்விக்கு ரூ.20 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கினார்.

கமென்ட் செய்யுங்க வாசகர்களே!

துாய்மைப்பணியார்செல்வியின் நேர்மைக்கு பாராட்டு தெரிவித்து கமென்ட் செய்யுங்க வாசகர்களே!

Source link