டி20 உலக கோப்பை கிரிக்கெட்அரையிறுதி: இந்தியா அதிரடி ரன் குவிப்பு

மும்பை: டி 20 உலக கோப்பை கிரிக்கெட்டின் 2வது அரையிறுதியில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வெனற இங்கிலாந்து அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது.இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 55 ரன் எடுத்துள்ளது.

இந்தியா, இலங்கையில் 10வது ‘டி-20’ உலக கோப்பை தொடர் நடக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடக்கும் இரண்டாவது அரையிறுதியில் நடப்பு சாம்பியன் இந்தியா, இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது.

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 55 ரன் எடுத்துள்ளது.

துவக்க வீரர் அபிஷேக் சர்மா 9 ரன்னில் ஜாக்ஸ் பந்தில் சால்ட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் பைனலில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளும்.

Source link