புதுடில்லி: மேற்கு வங்க கவர்னர் சி.வி. ஆனந்தபோஸ் ராஜினாமா, தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமாவுக்கான காரணம் தெரியவில்லை.
மேற்கு வங்க சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால்,அங்கு அரசியல் களம் விறுவிறுப்பாக உள்ளது.
இந்நிலையில் அம்மாநில கவர்னராக உள்ள சி.விஆனந்த போஸ் தனதுபதவியை ராஜினாமா செய்துள்ளார். தற்போது டில்லியில் இருக்கும் அவர், ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார். அவர் மேற்கு வங்க கவர்னராக மூன்றரை ஆண்டுகள் பதவி வகித்துள்ளார்.
ராஜினாமா செய்ததை உறுதி செய்துள்ள ஆனந்த போஸ், கவர்னர் பதவியில் போதுமான காலம் இருந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
1977 ம் ஆண்டுஐஏஎஸ் அதிகாரியான அவர், கடந்த 2022 நவ.,23 ல் மேற்குவங்கத்தின் 21வது கவர்னராக நியமிக்கப்பட்டார்.
அவருக்கும் முதல்வர் மம்தாவுக்கும் ஆரம்பம் முதலே தீராத மோதல் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
