வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு தனி விமானம்

புதுடில்லி: ‘டி-20’ உலக கோப்பை தொடரில் பங்கேற்ற வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே அணிகள், ‘சூப்பர்-8’ சுற்றுடன் வெளியேறின. இந்த இரு அணி வீரர்களும் கடந்த மார்ச் 2ல் துபாய் வழியாக நாடு திரும்ப இருந்தனர். ஆனால் திடீரென ஏற்பட்ட போர் காரணமாக, விமான போக்குவரத்து தடைபட்டது. வீரர்கள் நாடு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர்.

இதனிடையே சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) ஏற்பாட்டின் படி, ஜிம்பாப்வே அணியின் ஒரு பிரிவினர், எத்தியோப்பியா வழியாக ஹராரே கிளம்பினர்.

வெஸ்ட் இண்டீஸ் அணியினர் இன்னும் கொல்கட்டாவில் தான் உள்ளனர். பயிற்சியாளர் டேரன் சமி வெளியிட்ட செய்தியில்,’ நாங்கள் நாடு திரும்ப வேண்டும். நாளையா, அடுத்த வாரமா என யாராவது சொல்லுங்கள்,’ என விரக்தியுடன் தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் நாடு திரும்ப, தனி விமானம் ஏற்பாடு செய்யப்படுவதாக செய்தி வெளியாகியுள்ளன.

Source link