அபராதங்களுக்கு எதிர்ப்பு: மஹா.,வில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக்

மும்பை: மஹாராஷ்டிராவில், சாலை விதிமீறல் என்ற பெயரில் அதிகளவில் அபராதம் விதிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில தனியார் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற போராட்டம் அறிவித்து உள்ளனர்.

மஹாராஷ்டிரா தனியார் போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தினர், ‘இ – சலான்’ எனப்படும் மின்னணு அபராதம் விதிக்கும் முறையில் சீர்திருத்தம், நிலுவையில் உள்ள அபராதங்களை ரத்து செய்தல், வணிக வாகனங்களுக்கு விதிக்கப்படும் வரி மற்றும் சுங்கக் கட்டணங்களை குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.

இது தொடர்பாக மும்பையில் உள்ள போக்குவரத்து கமிஷனர் அலுவலகத்தில் நேற்று பேச்சு நடந்தது. இது தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து மஹாராஷ்டிரா போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் நேற்று இரவு முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கை:

சாலை விதிமீறல் என்ற பெயரில் அதிகளவில் அபராதம் விதிப்பதை கண்டித்து வேலைநிறுத்தம் அறிவித்துள்ளோம். பள்ளி பஸ்கள், ஒப்பந்த பஸ்கள், தனியார் பஸ்கள், லாரிகள், டெம்போக்கள், டாக்ஸிகள் உள்ளிட்ட அனைத்து வணிக வாகனங்களும் இயங்காது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link