மகனுக்கு போட்டி: ராஜ்ய சபா தேர்தலில் உதவியாளரை வேட்பு மனு தாக்கல் செய்ய வைத்தார் ராமதாஸ்

ராஜ்யசபா தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய, கடைசி நாளான நேற்று பிற்பகல் 3:00 மணி வரை அவகாசம் இருந்த நிலையில், 2:59 மணிக்கு பா.ம.க., நிறுவனர் ராம தாசின் உதவியாளர் சுவாமிநாதன் திடீரென வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இது தொடர்பாக சுவாமி நாதனிடம் கேட்டபோது, “ராஜ்யசபா தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ வேட்பாளராக, பா.ம.க., கட்சி யின் நிறுவனர் ராமதாஸ் என்னை அறிவித்துள்ளார். அதை தொடர்ந்து, நேற்று பிற்பகல் 2:59 மணிக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன்,’ என்றார்.

ராஜ்யசபா தேர்தலில் ஒருவரது வேட்பு மனு ஏற்கப்பட வேண்டுமானால், 10 எம்.எல்.ஏ.,க்கள் முன்மொ ழிய வேண்டும். ஆனால், ராமதாஸ் தரப்புக்கு ஜி.கே.மணி, அருள் ஆகிய இரண்டு எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே உள்ளனர்.இது பற்றி சுவாமிநா தனிடம் கேட்டபோது, ‘தேர்தல் கமிஷனின் முழு வழிகாட்டுதலையும் பின் பற்றி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன்,’ என்றார்.

ராஜ்யசபா தேர்தலில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்பு மனுக்கள், இன்று காலை 11:00 மணிக்கு பரிசீலனை செய்யப்பட உள்ளன. சுவாமிநாதனின் வேட்பு மனுவை, 10 எம்.எல்.ஏ.,க்கள் முன் மொழியவில்லை எனில் அவரின் மனு தள்ளுபடி செய்யப்படும்.

Source link