ராஜ்யசபா எம்பி தேர்தலில், மஹாராஷ்டிராவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர், எதிரெதிர் முகாமில் இருந்து போட்டியிடுகின்றனர். சரத் சந்திர பவார் அணியின் தேசியவாத காங்., கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் சரத் பவாரும், மறைந்த துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அஜித் பவாரின் மகன் பார்த் பவாரும் போட்டியிடுகின்றனர்.
இவர்கள் இருவரும் எம்.பி.,யாக தேர்ந்தெ டுக்கப்பட்டால், பார்லி.,க்கு செல்லும் தாத்தா, பேரன் என்ற பெருமையை பெறுவர். அஜித் பவார் மறைவுக்குப் பின், தேசியவாத காங்., கட்சியின் தலைவராகவும், துணை முதல்வராகவும் பொறுப்பேற்ற அவரது மனைவி சுனேத்ரா பவார், இதுவரை தன் ராஜ்யசபா எம்.பி., பதவியை ராஜினாமா செய்யவில்லை.
