தங்கம் விலை தொடர்ந்து சரிவு; 5 நாட்களில் ரூ.6,520 குறைவு

சென்னை: சென்னையில் இன்று (மார்ச் 06) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,280 ரூபாய் சரிந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்து, ஈரான் மீது தாக்குதல் நடத்துகின்றன. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால், கடந்த வாரம், தங்கம், வெள்ளி விலை மிகவும் அதிகரித்தது.

போர் தொடங்கியபோது அதிகரித்த தங்கம் விலை, இப்போது சில நாட்களாக குறைந்து வருகிறது. தமிழகத்தில் மார்ச் 3ம் தேதி ஆபரண தங்கம் கிராம், 15,465 ரூபாய்க்கும், சவரன், 1,23,720 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 315 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்று முன் தினம் மார்ச் 04ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு, 265 ரூபாய் குறைந்து, 15,200 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 2,120 ரூபாய் சரிவடைந்து, 1,21,600 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, 20 ரூபாய் குறைந்து, 295 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 20,000 ரூபாய் சரிவடைந்து, 2.95 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்று (மார்ச் 05) ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 15,120 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் 295 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று (மார்ச் 06) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,280 ரூபாய் சரிந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 14,960 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. தங்கம் விலை 5 நாட்களில் 6,520 ரூபாய் குறைந்து விற்பனை ஆகிறது.

வெள்ளியும் சரிவு

வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 290 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் குறைந்து ஒரு கிலோ 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது.

Source link