ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் போட்டியிட்டு என்னை வெல்ல முடியுமா? – சீமான் கேள்வி, “Can you compete against me and win without giving money for votes?”

ஒரு நாட்டின் எதிர்காலம் வகுப்பறையில் தீர்மானிக்கப்படுகிறது. படிப்பு சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்கள் நடுரோட்டில் நின்று போராடிக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவர்கள், செவிலியர்களும், துப்புரவு பணியாளர்கள் என எல்லோரும் வீதியில் நிற்கிறார்கள். ஆனால் நல்லாட்சி நடப்பதாக கூறுகிறார்கள்.போக்குவரத்து துறையில் 1 லட்சம் கோடி கடன் இருக்கும் நிலையில் பேருந்துகளில் இலவச பயணம் எதற்கு? மத்திய- மாநில அரசுகள் கடன் வாங்கி அரசை 3 நடத்தியும் எந்த பயனும் இல்லை. ஆசிரியர்களை கண்டு கொள்ளாமல் இருக் கும் அரசு இருப்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

எங்கள் கொள்கைக்கு யாரும் போட்டி இல்லை. எனக்கு விழுந்த ஓட்டு எனது கொள்கைக்காக விழுந்த ஓட்டாகும். பணம் கொடுக்காமல் எனக்கு மக்கள் ஓட்டு போட்டுள்ளனர். தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் போட்டியிட்டு என்னை வெல்ல முடியுமா? எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, ஆகியோர் எனது ரோல் மாடல் என்று விஜய் கூறி இருப்பது பற்றி கேட்கிறீர்கள். அது தம்பியின் விருப்பம். அவர்களை ஏற்றுக்கொண்டது எப்படி? என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். நான் எல்லா இடத்திலும் உங்களை (பத்திரிகையாளர்களை) சந்தித்து பேசுகிறேன். ஆனால் விஜய் உங்களையெல்லாம் சந்திக்கவே மாட்டார். ஆனால் அவரைப் பற்றி நீங்கள் பேசிக் கொண்டே இருக்கிறீர்கள். இதுவும் ஒரு கொடுமைதானே.”

இவ்வாறு சீமான் கூறினார்.

Source link