லோக்சபாவில் அமளி: காங்கிரஸ் எம்பிக்கள் 8 பேர் சஸ்பெண்ட்

புதுடில்லி: ராகுலை பேச அனுமதிக்கவில்லை எனக்கூறி அமளியில் ஈடுபட்டதுடன் மேஜை மீது ஏறியும், போராட்டத்தில் ஈடுபட்டதாக லோக்சபாவில் காங்கிரஸ் எம்பிக்கள் 8 பேர் இந்த கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது நேற்று ராகுல் பேசும போது முன்னாள் ராணுவ தளபதி எழுதி வெளியிடப்படாத புத்தககத்தில் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் குறித்து குறிப்பிட்டார். இதற்கு ஆளுங்கட்சி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து, சீன ஊடுருவல் குறித்து ராகுலை பேசவிடவில்லை எனக்கூறி காங்கிரஸ் எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். மேஜை மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சபாநாயகர் இருக்கை நோக்கி காகிதங்களை வீசியதாக குற்றம்சாட்டப்பட்டது.

மாணிக்கம் தாகூர் , ஹிபி ஈடன், அம்ரிந்தர் ராஜா வாரிங் உள்ளிட்ட 8 எம்பிக்கள் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதற்கான தீர்மானத்தை லோக்சபாவில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கொண்டு வந்தார். அவர்கள் இந்த கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள் விவரம்:

ஹிபி ஈடன்

கிரண் குமார் ரெட்டி

குர்ஜித் சிங் அயுக்லா

அமரிந்தர் சிங்ராஜா வாரிங்

மாணிக்கம் தாகூர்

பிரசாந்த் படோல்

தியோன் குரியாகோஸ்

போராட்டம்

சஸ்பெண்ட் செய்யப்பட்டதை தொடர்ந்து பார்லிமென்ட் வளாகத்தில் ராகுல் தலைமையில் இண்டி கூட்டணி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Source link