Career: இன்ஜினீயரிங் படிச்சுருக்கீங்களா? வங்கியில் 'மேனேஜர்' பணி; ரூ.1 லட்சம் வரை சம்பளம்

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

என்ன பணி?

ஐ.டி பாதுகாப்பு நிபுணர், எமர்ஜிங் டெக்னாலஜி, சைபர் செக்யூரிட்டி அனலிஸ்ட், Incident Management and Forensics, டெஸ்ட் இன்ஜினீயர்ஸ் பிரிவுகளில் Deputy Manager பணி.

மொத்த காலிப் பணியிடங்கள்: 12

வயது வரம்பு: 25 – 35 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)

சம்பளம்: ரூ.64,820 – 93,960

கல்வித் தகுதி: பெரும்பாலும் அனைத்து பிரிவுகளுக்கு B.Tech அல்லது B.E படிப்பு தேவைப்படுகிறது. ஆனால், ஒவ்வொரு பணிகளுக்கு ஏற்ப பாடப்பிரிவு மாறுபடுகிறது.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா

மேலும், பணி அனுபவம் அல்லது கூடுதல் படிப்பு போன்றவையும் எதிர்பார்க்கிறார்கள். அது குறித்துத் தெரிந்துகொள்ள பக்கம் 5 – 10.

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

ஷார்ட்லிஸ்ட்டிங் மற்றும் நேர்காணல்.

விண்ணப்பிக்கும் இணையதளம்: recruitment.sbi.bank.in

விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 16, 2026

மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

Source link