28 + 1 எனும் மேஜிக் எண் வேலை செய்யுமா? | My Vikatan author shares about congress Dmk alliance

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

28 + 1 இதுதான் இன்றைய ஹாட் டாபிக். இந்த மேஜிக் நம்பரை பிடிக்க எத்தனை எத்தனை பேட்டிகள். X தள பதிவுகள். இன்னும் நிறைய…நிறைய… 2011 ல் மேலே ரெய்ட் கீழே கூட்டணி பேச்சுவார்த்தை என்ற பழைய பரபரப்பை மிஞ்சியது தற்போதைய திமுக காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை, மற்றும் ஒப்பந்தம்.

ஐபிஎல் ஏலம் போல எகிறிக் கொண்டே போனது காங்கிரஸ் கட்சி.

தவெக ஏலம் எடுக்க தயாராகிக் கொண்டிருக்கிறது என்று சொல்லி சொல்லியே திமுகவை பயமுறுத்திக் கொண்டு இருந்தது. ஒரு வழியாக 28 + 1 என்று A S K (ARIVALAYAM SUPER KINGS) அணிக்கு ஏலம் எடுத்துவிட்டார்கள்.

ராகுல் காந்தி - ப்ரியங்கா காந்தி

ராகுல் காந்தி – ப்ரியங்கா காந்தி

எந்த அடிப்படையில் எடுத்தார்கள் என்ற கேள்வி வருகிறது. சிறந்த பவுலிங்… சிறந்த பேட்டிங்…சிறந்த ஃபீல்டிங்… பதில் எதுவுமில்லை. அந்த கட்சியில்

சிறந்த பேச்சாளர்கள் இருக்கிறார்களா….? இல்லை… ஃபீல்டிங் என்று சொல்லப்படும்

களத்தில் இறங்கி வேலை செய்ய போதுமான தொண்டர்கள் இருக்கிறார்களா…

இல்லை…தொகுதிக்கு நன்கு அறிமுகமான, மக்களோடு மக்களாக கலந்து பழகக்கூடிய

வேட்பாளர்கள் இருக்கிறார்களா…இல்லை. இல்லை என்பதே காங்கிரஸ் கட்சியின் பிரதானம்.

அதில் 80 சதவீதம் வெற்றி பெற்றுவிட்டார்கள்.

Source link