கமேனியை கொன்றது எப்படி: வீடியோ வெளியிட்டது இஸ்ரேல்

டெல் அவிவ்: ஈரான் ஆட்சியாளர் கமேனியை கொன்றது குறித்த வீடியோவை இஸ்ரேல் வெளியிட்டு உள்ளது.

எதிரிகளுக்கு எங்கு இருக்கிறோம் என தெரியாதவாறு ஈரான் மதத்தலைவரும், ஆட்சியாளருமான கமேனி பாதுகாப்புடன் ரகசிய இடத்தில் வசித்து வந்தார்.

கடந்த 27 ம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் நடத்திய தாக்குதலில் கமேனி கொல்லப்பட்டார். இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் நிலவுகிறது. அவர் எப்படி கொல்லப்பட்டார் என்பது குறித்து பல்வேறு வகையான தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் பதுங்கு குழியில் இருந்த கமேனி கொல்லப்பட்டது குறித்த வீடியோவை இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்டு உள்ளது.

அத்துடன், வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: டெஹ்ரானில் உள்ள ஈரான் ஆட்சியாளரின் தலைமை அலுவலகத்துக்கு அடியில் நிலத்தடி ராணுவ பதுங்கு குழியில் இருந்த கமேனியை 50 இஸ்ரேலிய போர் விமானங்கள் அழித்தன எனத் தெரிவித்துள்ளது.

Source link