வடம் விமர்சனம்: வடமஞ்சு விரட்டு காளை கதாநாயகனும், தேடிவரும் பகையும் – இது மற்றுமொரு மதுரை சினிமா! | vimal balasaravanan natty starrer vadam movie review

பல மதுரை சினிமாக்கள் ரேஸ் ஓட்டி தேய்ந்து போன களத்திலேயே, இதுவும் குதித்து ஸ்லோவ் ரேஸ் ஓட்டத் தொடங்குகிறது. அழுத்தமின்றி எழுதப்பட்டிருக்கும் கதாபாத்திரங்கள் நிகழ்த்தும் அபத்தமான காமெடிகள், ‘அவுட் டேடட்’ காதல் சடுகுடு ஆட்டங்கள் ஆகியவற்றுடன் கதை மோதல் புள்ளியை எட்டுகிறது.

இப்படியே தடுமாற்றம் நிறைந்த பாதையிலேயே பயணிக்கும் முதல் பாதி சோர்வுடன் இடைவேளை பக்கம் ஒதுங்குகிறது.

செயற்கையான காட்சியமைப்புகளால் இடைவேளை ட்விஸ்ட்டை நமக்கு முன்கூட்டியே வெளிச்சம் போட்டுச் சொல்லிவிடுகிறார்கள். பிறகும் அதனைச் சம்பவமென பில்டப்போடு அரங்கேற்றுவதெல்லாம் ‘நானும் ரௌடிதான்’ ரகம் ப்ரோ!

வடம் விமர்சனம் | Vadam Review

வடம் விமர்சனம் | Vadam Review

இரண்டாம் பாதியில், கதைக்குள் கதை, ஒன்று முடிந்த பிறகு மீண்டும் துளிர்க்கும் கிளைக் கதை என நீட்டிச் செல்லும் ஐடியாக்களும் நம்மைக் குழப்புவதுடன் ‘கிறுகிறு’க்கவும் வைக்கிறது. அழுத்தமான பின் காரணங்கள் இல்லாமல் திரைக்கதையின் எமோஷனல் முடிச்சுகளை அப்படியே அவிழ்த்திருப்பதும் ‘லொஜக் மொஜக்’ ஆட்டம்!

நடிகர்களின் கச்சிதமான பங்களிப்பு, புதுமையான கதையம்சம் எனப் பலவும் இந்த வடமஞ்சு விரட்டு சினிமாவில் ஆப்சென்ட் ஆகியிருப்பதால், படம் பிடி மாடு ஆகியிருக்கிறது.

Source link