லண்டன்: இ.டி.பி.எல்., தொடரின் அணியை வாங்க அஷ்வின், டிராவிட் திட்டமிட்டுள்ளனர்.
ஐரோப்பிய பிரிமியர் லீக் ‘டி-20’ தொடர் வரும் ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட உள்ளது. ரோட்டர்டாம், ஆம்ஸ்டர்டாம், பெல்பாஸ்ட், எடின்பரோ, டப்ளின், கிளாஸ்கோ என ஆறு அணிகள் இடம் பெற்றுள்ளன.
இதில் தென் ஆப்ரிக்காவின் டுபிளசி, ஜான்டி ரோட்ஸ், கிளாசன் இணைந்த நிர்வாகம், ரோட்டர்டாம் அணியை வாங்கியுள்ளது. பெல்பாஸ்ட் உள்ளிட்ட 3 அணிகள், ஆஸ்திரேலியா, நியூசிலாந்தை சேர்ந்தவர்கள் வாங்கியுள்ளனர். கிளாஸ்கோ அணியை இந்தியாவின் டிராவிட் 53, அஷ்வின் 39 இணைந்து வாங்க உள்ளதாக தெரிகிறது. இதுகுறித்த அறிவிப்பு மார்ச் இறுதியில் வெளியாகும்.
ஆர்வம் ஏன்
2003 சீசனில் ஸ்காட்லாந்தில் விளையாடியவர் டிராவிட். தவிர, 2021-2024ல் இந்திய அணி பயிற்சியாளராக இருந்தார்.
இதேபோல, மூன்றுவித கிரிக்கெட்டில் 765 விக்கெட் சாய்த்த அஷ்வின், கடந்த 2024, டிசம்பர் மாதம் ஓய்வு பெற்றார். இவர், இத்தொடரில் களமிறங்குவாரா எனத் தெரியவில்லை. ஒருவேளை விளையாடினால் இத்தொடருக்கு வரவேற்பை அதிகரிக்கும்.
