மகளிருக்கான தேர்தல் அறிக்கை விஜய் இன்று வெளியீடு

சென்னை: மகளிருக்கான தேர்தல் வாக்குறுதிகளை, த.வெ.க., தலைவர் விஜய் இன்று அறிவிக்க உள்ளார்.

த.வெ.க., தலைமை வெளியிட்ட அறிக்கை:

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, த.வெ.க., மகளிர் தின விழா இன்று கொண்டாடப்படுகிறது.

கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்கும் இந்நிகழ்ச்சி, மாமல்லபுரம் போர் பாயின்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில், மாலை 3:00 மணி முதல் 5:00 மணி வரை நடக்கிறது. சட்டசபை தேர்தல் வாக்குறுதிகளின் ஒரு பகுதியாக, மகளிருக்கான திட்டங்கள் குறித்து விஜய் அறிவிக்க உள்ளார். நுழைவுச்சீட்டு இல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை.

அதேபோல், அனைத்து மாவட்டங்களிலும் மகளிர் தின விழா, நாளை கொண்டாடப்பட உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link